வேட்டைக்காரன் விமர்சனம்
விஜயின் மூன்று தொடர் தோல்விகளுக்கு பின் வந்திருக்கும் படம். ஏவிஎம் தயாரிப்பில் சன் பிக்சர்சால் வெளியீட்டில் மக்கள் திலகத்தின் பட தலைப்பில் மிகவும் எதிர்பார்க்கபட்ட வேட்டைக்காரன். படத்தின் இயக்குனர் பாபுசிவன். இசை விஜய் ஆண்டனி. கலை மிலன். எடிட்டிங் VT விஜயன்..
இயக்குனருக்கு இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தரணியின் அஸிஸ்டென்ட் என்ற அறிமுகம் வேறு. ஆனால் அது படத்தில் துளியும் இல்லை. இயக்குனர் மற்றும் கதை தேர்வில் விஜய் கவனம் செலுத்த வேண்டும்.
கதைப்படி நாயகன் மூன்று முறை பனிரெண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்து நான்காம் முறை தேர்ச்சி அடைகிறான். ஊரில் நல்ல விசயங்களுக்காக போராடி போலீஸ் ரவி என்ற பேருடன் இருக்கிறான். சிறந்த போலீஸ் மற்றும் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டான தேவராஜை(ஸ்ரீ ஹரி) போல் ஆக வேண்டும் என்ற ஆர்வத்துடன் சென்னையில் அவர் படித்த கல்லூரியில் சேருகிறான். வந்த இடத்தில் செல்லா என்ற ரவுடியுடன் மோதல் ஏற்பட அதன் மூலம் அவனது தந்தை வேதநாயகம் உடன் மோதி அப்பாவி மக்களை காக்கிறார். படத்திற்காக விஜய் மிகவும் உழைத்திருக்கிறார் என்பது முதல் பாடலிலேயே தெரிகிறது. ஆனால் மோசமான கதை அனைத்தையும் கெடுத்துவிடுகிறது. நாயகி அனுஸ்கா விஜய்க்கு சற்றும் பொருத்தமில்லாத தேர்வு. இரண்டு வில்லன்களும் சூப்பர். பின்னணி இசை நன்றாக இருக்கிறது. இசை நன்றாக இருந்ததே என்று எதிர்பார்த்தால் சின்ன தாமரை பாடலுக்கு குடுமி வைத்துக்கொண்டு வந்து பயமுறுத்துகிறார் விஜய். மற்ற பாடல்களும் சுமார் ரகம்தான். படத்தை பார்க்கும்போது மற்ற படங்களின் ஞாபகங்கள் வருவதை தடுக்க முடியவில்லை..
மொத்தமாக பார்த்தால் விஜய் இந்த முறையும் தோல்வியை ருசித்திருக்கிறார் என்பதுதான் உண்மை.
செவ்வாய், 29 டிசம்பர், 2009

புதன், 18 மார்ச், 2009
செவ்வாய், 17 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)