செவ்வாய், 18 மே, 2010

நகரத்தில் நடப்பவர்களுக்கு
நடக்கத் தெரிந்தால் மட்டும் போதாது நகர சாலைகளில்..
போக்குவரத்து நின்ற ஒரு நொடி அவகாசத்தில் சாலைகளின் குறுக்கே ஓடத் தெரிந்திருக்க வேண்டும்..
அவசரத்தில் யார் மீதேனும் மோதிவிட்டால் மன்னிப்புக்கேட்டு நிற்காமல் அலட்சியமாகக் கடந்திடுவோம்..
சாலையோரத்தில் உயிருடன் அல்லது இறந்து கிடப்பவர்கள் யாரென்ற ஆராய்ச்சி நமக்கு வேண்டாம்..
நடந்துபோகும் நம்மிடம் பிடிவாதமாகக் கைஎந்துபவர்களை நின்று திட்டினாலும் நேரம் வீணாகிவிடும்..
இறுதி ஊர்வலத்துக்கும் ஆம்புலன்ஸ் வண்டிக்கும் நகரப் போக்குவரத்தில் பாதி மனசோடு இடம் கொடுப்போம்..
மேற்கண்ட தகுதிகளின்றி நகரத்தில் நாம் நடந்தால் அன்னியரென்று விலக்கப்படுவது நிச்சயம்..........