வெள்ளி, 18 ஜூன், 2010

ராவணன் விமர்சனம்
இசைப் புயலின் இன்னொரு அவதாரம். மேல்தட்டு மக்களின் அதிகார வெறியை குறிப்பாகபோலீசாரின் வெறியை காட்டியிருக்கும் படம். மணிரத்னத்தின் முந்தய படங்கள்வரிசையில்அடுத்த மெகா ஹிட். புராணக் கதைகளை இவ்வளவு தைரியமாக படமாக்குவதில் மணிரத்தினத்திற்கு நிகர் எவரும் கிடையாது. விக்ரமின் நடிப்புக்கு சரியான தீனிபோட்டிருப்பவர் மணிரத்னம் மட்டுமே. பழைய ராமாயணத்தை மாடர்னாகமாற்றியிருக்கிறார் இயக்குனர். படம் முழுக்க காட்டுக்குள்எடுக்கப்பட்டிருப்பதால் கேமிரா விளையாடியிருக்கிறது. ஐஸ்வர்யாராயை மிகஅழகாகக் காட்டியிருக்கிறார் கேமிரா மேன். காட்சிகள் படமாக்கப்பட்ட விதத்தில்ஹாலிவுட் படங்களுக்கு சவால் விட்டிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். கதைப்படி திருநெல்வேலியின் பெரிய தாதா வீரய்யா என்னும் வீரா. திருநெல்வேலியின் அனைத்து காவல் நிலையங்களிலும் சுமார் 163 வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளி. சிங்கராசு எனும் அண்ணன் மற்றும்சர்க்கரை எனும் தம்பி ஆகியோருடன் குற்றங்கள் புரிகிறான். அந்த சமயத்தில்திருநெல்வேலிக்கு புதியதாக என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் தேவ் ஆனந்த்எஸ்.பி.யாக பொறுப்பேற்கிறார். அவருடைய மனைவி ராகினி. வீராவின்தங்கையின் திருமணத்தின்போது அங்கு வரும் போலீசார் வீராவை சுட்டுவிட்டுஅவர் தங்கையை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து விடுகின்றனர். அவமானம் தாங்காமல் தங்கை தற்கொலை செய்து கொள்ள பலிவாங்குவதற்காக போலீஸ் ஆபீசரின் மனைவியை கடத்துகிறார் வீரா. கடும்முயற்சிக்குப்பின் மனைவியை மீற்கிறார். அத்துடன் நில்லாமல் மனைவியின்மீது சந்தேகப்பட அவர் கோபம் கொண்டு மீண்டும் வீராவை தேடி செல்கிறார். அப்போது அவரை பின்தொடரும் போலீஸ் வீராவை சுட்டுக்கொல்கிறது. வீராவாக விக்ரம், நடிப்பில் பிரமிக்க வைக்கிறார். முதல் காட்சியில் அவர்ஆற்றில் குதிக்கும் காட்சி அருமையாக படமாக்கப்படிருக்கிறது. முரட்டு உடம்பு, கோபம் நிறைந்த கண்கள், சோகம், வெறி என தனித்து நிற்கிறார் விக்ரம். சிங்கராசுவாக பிரபு, தேவ் ஆனந்தாக பிருதிவிராஜ், நளினியாக ஐஸ்வர்யாராய்என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசை மிரட்டுகிறது. சந்தோஷ்சிவனின் ஒளிப்பதிவு படத்தை அழகாக கொண்டு செல்கிறது. சந்தோஷ் சிவனின் அசாதாரண ஒளிப்பதிவு தமிழில் வேறு எந்தப் படத்திலும் இத்தனை அழகான இயற்கைக் காட்சிகளைப் பார்த்திருக்க முடியாது எனும் அளவுக்கு அருமை. மலைகள், அருவிகள், காட்டு வழிகள், அந்த எரியும் பாலம், ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராய் அருவியில் விழும் காட்சி என அனைத்தையுமே கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். பார்க்கும் நமக்கே ஜில்லிடும் அளவு தத்ரூபமான ஒளிப்பதிவு. பாரஸ்ட் கார்டாக கார்த்திக் காமெடி செய்கிறார். ஐஸ்வர்யாராய்முதல் முதலாக் தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார். நித்தியானந்தா புகழ் ரஞ்சிதாகேரக்டரை இயக்குனர் சுருக்கி விட்டார் என்பது அவர் வரும் காட்சிகளின்எண்ணிக்கையிலேயே தெரிகிறது. விக்ரமின் தங்கையாக பிரியாமணி மீண்டும்ஒருமுறை சிறப்பான நடிப்பு. அரவாணி வேடத்தில் வையாபுரியும் நடித்திருக்கிறார். படத்திற்கு வசனம் எழுதி இருப்பவர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி. மேல்தட்டு மக்களுக்கு எதிரான வசனங்களில் அனல் பறக்கிறது. படத்தின் இறுதிகாட்சியில் விக்ரமின் நடிப்பு சூப்பர். பாடல்கள் போலவே ரகுமானின் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருக்கின்றது. இசைபோலவே எடிட்டிங்கில் சேகர் பிரசாத்தும் காட்சிகளை அருமையாக கோர்த்திருக்கிறார், திரைக்கதை வேகத்திற்கு இவருக்கு ஒரு ஒ.. போடலாம். பிரபு வெளுத்து வாங்கியிருக்கிறார், டைமிங் காமடியிலும் ஹீரோயிசத்திலும் தூள் கிளப்புகிறார், இப்படியான கதாபாத்திரங்களுக்கு இன்றைய ஒரே தெரிவு பிரபுதான். கார்த்திக்கிற்கு சொல்லிக்கொள்ளும் படியாக காட்சிகள் இல்லாவிட்டாலும் தன்னால் முடிந்தளவிற்கு பங்களித்திருக்கிறார். உடல்மொழி , வசன உச்சரிப்பு என்பவற்றில் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் விக்ரம் ராவணனிலும் விட்டு வைக்கவில்லை, அதிகமான ரிஸ்க் எடுக்கும் காட்சிகளிலும் சர்வசாதாரணமாக சாகசம் புரிந்திருக்கிறார். ‘உசுரே போகுதே’ கேட்கவும் ரசிக்கவும் வைக்கிறது. காட்சிகளோடு இணைந்து பின்னணி இசையும் பேசுகிறது. கிட்டத்தட்ட ஒரு முழு நிமிடத்திற்கு எந்த ஆரவாரமும் இல்லை! அதன் பிறகு, கார்த்திக் பாட ஆரம்பிக்கின்றார் - மனதில் தேக்கி வைத்துள்ள ஆசைகளையெல்லாம் அத்தனை அழகாக தன் குரலில் கொண்டு வருகிறார். வைரமுத்துவின் வரிகள் அற்புதம். நாயகியை அடைய நினைப்பது தர்மம் இல்லை, அடையவும் முடியாது என்று தெரிந்தும் பாடுபவர் ஏங்குவது போல அமைந்திருக்கிறது இப்பாடல். ஒரு பெண்ணின் ஹம்மிங்கோடு ஆரம்பித்து, கீஸ் சேர்ந்துகொள்ள, அனுராதா ஸ்ரீராமின் உச்சஸ்தாயியில் சக்கை போடு போட்டவாறே வருகிறாள் காட்டுச் சிறுக்கி! உடனே, ஷங்கர் மஹாதேவனும் சேர்ந்துகொள்ள, கால்கள் தாளம் போட ஆரம்பிக்கின்றன. இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் எல்லோருமே திரைத்துறையின் பெரியதலைகள். அவர்களை எல்லாம் வைத்துக் கொண்டு இப்படி ஒரு படத்தைஇயக்குவது தயாரிப்பது என்பதே சவாலான விஷயம்தான். இயக்குநர்மணிரத்னம் அதில் வெற்றிபெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.