உலகக் கோப்பை ஆரம்பம்
எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிவிட்டன.
பழி தீர்த்தது இந்தியா:
முதல் போட்டியில் இந்தியா வங்கதேசத்தை எதிர்கொண்டது. பகலிரவு ஆட்டமான இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. சச்சின், சேவாக் துவக்க வீரர்களாக களம் புகுந்தனர்.
அனல் பறந்த ஆட்டம் :
சேவாக் முதல் பந்தில் பவுண்டரி அடித்து உலகக் கோப்பையை தொடக்கி வைத்தார். 140 பந்துகளில் 175 ரன்கள் குவித்து தனது அதிகபட்ச ரன் எண்ணிக்கையை பதிவு செய்தார். ஒரு கட்டத்தில் சேவாக் இரட்டை சதமடிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் சோர்ந்து போன அவர் வழக்கத்துக்கு மாறான மெதுவான ஷாட்டின் மூலம் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விராத் கோஹ்லி சதமடித்து திறமை நிரூபித்தார். இந்த இருவரின் ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 370 ரன்கள் எடுத்தது.
அசத்தல் பேட்டிங்:
வங்கதேசம் பந்து வீச்சில் சொதப்பினாலும் பேட்டிங்கில் அசத்தியது. இலக்கு 300க்குள் இருந்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார்கள். இந்தியா சார்பில் அசத்திய முனாப் பட்டேல் 4விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் வங்கதேசம் 283 ரன்கள் மட்டுமே எடுத்து 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக சேவாக் தேர்வு செய்யப்பட்டார்.
விரிவான ரன் பட்டியல்:
http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/engine/current/match/433558.html
20.02.2011:
இன்று நடைபெற்ற போட்டிகளில், நியுசிலாந்து கென்யாவையும்(10விக்கெட் வித்தியாசத்தில்) இலங்கை அணி கனடாவையும்(210ரன்கள் வித்தியாசத்தில்) வீழ்த்தின.
விரிவான ரன் பட்டியலுக்கு:
http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/engine/current/match/433559.html
http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/engine/current/match/433560.html