சனி, 27 பிப்ரவரி, 2010

தங்க ரகசியம்
உலக நாடுகளிலேயே மிக அதிகமாக தங்கத்தை பயன்படுத்துகிற நாடாக நமதுநாடு திகழ்கிறது. IMF என்று அழைக்கப்படும் சர்வதேச நிதி நிறுவனம் மற்றும்அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சு ஆகிய நாடுகளிடம் தங்கம் கையிருப்பு அதிகமாகஇருக்கிறது. அதே நேரத்தில் நமது நாட்டில் சாதாரண மனிதர்களிடம் கூட தங்கம்இருக்கிறது. இதனால் தங்கம் கையிருப்பு அதிகம் வைத்திருக்கின்ற மக்களைகொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. பெரும்பாலும் 22 காரட் தங்கத்தில்தான் விதவிதமான ஆபரணங்கள்செய்யப்படுகின்றன. தங்கத்தின் உற்பத்தி குறைந்த காலத்திலோ அல்லதுகிராக்கி அதிகம் ஏற்பட்டு சப்ளை குறைந்து போகும் நிலையில்தான் 8,9,10,12,14 காரட் தங்கத்தில் ஆபரணங்கள் செய்யப்படுகின்றன. நாம் உபகொயப் படுத்தும் உலோகம் எதுவானாலும் அதன் மதிப்பு என்பது 99.99 அல்லது 999 ஆகும். மீதி வேறு உலோகத்தின் கலவைதான். தங்கமும் இதற்குவிதிவிலக்கு இல்லை. அதனால்தான் அரசு வெளியிடுகிற தங்க பாளம், தங்கபிஸ்கட்டின் மீது 99.99 அல்லது 999 என குறிப்பிடப்படுகிறது. மீதி கலவைஉலோகம். இன்னொரு உலோகத்தை தங்கத்துடன் கலக்கும்போதுதான் அதைஉருக்கி நீட்டி தகடுகளாக்கி கண்கவரும் ஆபரனன்களாக மாற்ற முடிகிறது.
தங்கம் பற்றிய முக்கிய தகவல்கள்:
  1. தங்கத்தின் நிர்ணயிக்கப்பட்ட தரம் 24 காரட்.
  2. அமெரிக்க டாலரின் மதிப்பில் வீழ்ச்சி, உள்நாட்டில் பண வீக்கம் அதிகரிப்பு, பங்குசந்தையில் சரிவு ஏற்படுகிறபோது தங்கம் விலை சர்ரென்று ஏறுமுகம் காணும்.
  3. அட்சய திருதியை நாளில்-அதாவது சித்திரை மாதம் வளர்பிறை மூன்றாம்நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் குவியும் என்பது நம்பிக்கை.
  4. பத்தரை மாற்று தங்கம் என 24 காரட் தங்கத்தை போற்றினாலும் அது ஆபரணம்செய்ய உதவாது. மாற்று உலோகம் கலந்தால்தான் தங்கத்துக்கு சிறப்பு.
  5. தங்கத்துக்கு சிறப்பான மருத்துவ குணங்கள் உண்டு. வலது கை விரல்களில்தங்கம் அணிந்தால் ஆயுள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

சனி, 6 பிப்ரவரி, 2010

மிகப் பெரிய நகரம்
மக்கள் தொகை அடிப்படையில் உலகிலேயே மிகப்பெரிய நகரம் டோக்கியோ. இது ஜப்பான் நாட்டுத் தலைநகரம். இதன் மக்கள் தொகை தற்போதைய நிலவரப்படி 1 கோடியே 30 லட்சம். ஜப்பானின் 47 நிர்வாக அமைப்புகளில் ஓன்று டோக்கியோ. இது காண்டோ பிராந்தியத்தில் ஹோன் ஸீ தீவில் அமைந்து உள்ளது. டோக்கியோ மொத்த பரப்பளவு 2187(sq.km)சதுர கிலோமீட்டர்கள். ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 8000 பேர் என்ற வகையில் மக்கள் தொகை நெருக்கம் மிகுந்த மாநகரமாக உள்ளது. ஜப்பானிய அரசு, அரச குடும்பம், அரசு மாளிகை ஆகியவற்றின் இருப்பிடமாக டோக்கியோ உள்ளது. உலகத்திலேயே மக்கள் வாழ்வதற்கேற்ற மூன்றாவது சிறந்த நகரமாக டோக்கியோ தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் உலகில் விலைவாசி மிகவும் அதிகமுள்ள நகரங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது. இப்போது டோக்கியோ என்றழைக்கப்படும் இந்த நகரம் சென்ற நூற்றாண்டில் டோக்கேய் என்று அழைக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் இரு பெரும் சீரழிவுகளை டோக்கியோ சந்தித்தது. 1923ல் ஏற்பட்ட பெரும் காண்டோ பூகம்பம் மற்றும் இரண்டாம் உலகப் போர்குண்டுவீசுகள். பூகம்பத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இறந்தனர். இரண்டாம்உலகப் போரில் 1944-1945 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட குண்டுவீச்சில்ஏறக்குறைய பாதி டோக்கியோ நகரம் அழிந்தது. 2 லட்சம் பேர் வரைகொல்லப்பட்டனர். ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களில் அணுகுண்டுவீச்சால் ஏற்பட்ட சேதங்களைக் கூட்டினால் ஏற்படக்கூடிய அழிவிற்குஇணையாகும் இது. இவ்வளவு சீரழிவு ஏற்பட்ட பின்பும் ஜப்பானியர்கள் சோர்ந்துபோகாமல் தங்களது அயராத உழைப்பால் டோக்கியோ நகரத்தை ஒரு மாபெரும்- அதே நேரம் அனைத்து வசதிகளும் நிரம்பிய அதி நவீன நகராக எழுப்பிக்காட்டினர். மக்கள் வாழத் தகுந்த மூன்றாவது பெரிய நகரமாகவும் மாற்றிக்காட்டியுள்ளனர்.