என் சோகம்
என் வாழ்க்கையின் மிக கடினமான கால கட்டத்தை இப்போது சந்தித்திருக்கிறேன். என் தந்தை இறந்து விட்டார். அவரது வயது 48. என் உயிரில் பாதி போனது போன்ற உணர்வு என்னை வதைத்துக் கொண்டிருக்கிறது. அவர் இறந்த நாள்(09.01.2011) என் வாழ்வின் மறக்க முடியாத ரணமாக மாறி விட்டது.
என் தந்தையாக மட்டுமன்றி ஒரு மிகச் சிறந்த பண்பாளரகவும் திகழ்ந்தவர். இறுதி வரை யாரிடமும் எந்த கெட்ட பெயரும் எடுக்காமல் வாழ்ந்தவர். அவர் தற்போது என்னுடன் இல்லை என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. என்னை ஆறுதல் படுத்தி ஊக்கமூட்டிய சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் என் நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.
3 கருத்துகள்:
இந்த சின்ன வயதில் தந்தையை இழந்து வாடும் உனக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. உன் மணம் அமைதிபெற நான் இறைவனை வேண்டுகிறேன், தம்பி!
கவலை கொள்ளாதீர்..
அவருக்குச் செய்யும் கைம்மாறு அவரது பெயரைப் போலவே நிலைத்திருக்கும்படி நீங்கள் வாழ்ந்து காட்டுவதொன்றேயாகும்..
God Bless YOu.
திரு மோகன்...
உங்க இந்த சோகம் வருந்ததக்க ஒன்றுதான்.... ஆனால் அதிலிருந்து மீண்டு வாழ்வில் வெற்றிபெற்று காட்ட வேண்டும்... அதைதான் உங்க தந்தையும் விரும்புவார்.
இனி கவனமும் நிதானமும் நம்பிக்கையும் மிக முக்கியம்...
உங்க தந்தையின் ஆத்மா அமைதியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்....
உங்களுக்கு என் ஆழ்ந்த ஆறுதல்.
மீண்டு வாங்க.... எல்லாம் இயல்பே.
கருத்துரையிடுக