மிகப் பெரிய நகரம்
மக்கள் தொகை அடிப்படையில் உலகிலேயே மிகப்பெரிய நகரம் டோக்கியோ. இது ஜப்பான் நாட்டுத் தலைநகரம். இதன் மக்கள் தொகை தற்போதைய நிலவரப்படி 1 கோடியே 30 லட்சம். ஜப்பானின் 47 நிர்வாக அமைப்புகளில் ஓன்று டோக்கியோ. இது காண்டோ பிராந்தியத்தில் ஹோன் ஸீ தீவில் அமைந்து உள்ளது. டோக்கியோ மொத்த பரப்பளவு 2187(sq.km)சதுர கிலோமீட்டர்கள். ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 8000 பேர் என்ற வகையில் மக்கள் தொகை நெருக்கம் மிகுந்த மாநகரமாக உள்ளது.
ஜப்பானிய அரசு, அரச குடும்பம், அரசு மாளிகை ஆகியவற்றின் இருப்பிடமாக டோக்கியோ உள்ளது. உலகத்திலேயே மக்கள் வாழ்வதற்கேற்ற மூன்றாவது சிறந்த நகரமாக டோக்கியோ தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் உலகில் விலைவாசி மிகவும் அதிகமுள்ள நகரங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது. இப்போது டோக்கியோ என்றழைக்கப்படும் இந்த நகரம் சென்ற நூற்றாண்டில் டோக்கேய் என்று அழைக்கப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டில் இரு பெரும் சீரழிவுகளை டோக்கியோ சந்தித்தது. 1923ல் ஏற்பட்ட பெரும் காண்டோ பூகம்பம் மற்றும் இரண்டாம் உலகப் போர்குண்டுவீசுகள். பூகம்பத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இறந்தனர். இரண்டாம்உலகப் போரில் 1944-1945 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட குண்டுவீச்சில்ஏறக்குறைய பாதி டோக்கியோ நகரம் அழிந்தது. 2 லட்சம் பேர் வரைகொல்லப்பட்டனர். ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களில் அணுகுண்டுவீச்சால் ஏற்பட்ட சேதங்களைக் கூட்டினால் ஏற்படக்கூடிய அழிவிற்குஇணையாகும் இது.
இவ்வளவு சீரழிவு ஏற்பட்ட பின்பும் ஜப்பானியர்கள் சோர்ந்துபோகாமல் தங்களது அயராத உழைப்பால் டோக்கியோ நகரத்தை ஒரு மாபெரும்- அதே நேரம் அனைத்து வசதிகளும் நிரம்பிய அதி நவீன நகராக எழுப்பிக்காட்டினர். மக்கள் வாழத் தகுந்த மூன்றாவது பெரிய நகரமாகவும் மாற்றிக்காட்டியுள்ளனர்.
1 கருத்து:
continue...great blog
கருத்துரையிடுக