செவ்வாய், 26 ஜனவரி, 2010

டில்லி செங்கோட்டை
டில்லி என்றதும் நினைவுக்கு வருவது செங்கோட்டைதான். இந்திய சுதந்திரதினத்தன்று பிரதமர் தேசியக் கொடியேற்றி உரையாற்றும் பிரம்மாண்ட இடம். இதை உருவாக்கியவர் முஹலாய மன்னர் ஷாஜகான்.
தனது தலைநகரத்தை ஆக்ராவில் இருந்து ஷாஜகனாபாத்திற்கு(தற்போதைய பழைய டில்லி) ஷாஜகான் மாற்றியபோது செங்கோட்டை உருவானது. இதனைக்கட்டி முடிக்க 1638-48 வரை 10 ஆண்டுகள் ஆனது. செலவிட்ட தொகைஅப்போதைய மதிப்பிற்கு ஒரு கோடி ரூபாய். யமுனை நதிக் கரையில் ஒப்பிலாஅழகுடன் நிற்கும் செங்கோட்டை பாரசீக, ஐரோப்பிய, இந்தியக் கட்டடக்கலைகளை குழைத்து எழுப்பப்பட்டது. கண்களை மயக்கும் கலைநயம், சவால்விடும் கட்டுமானம், ஆச்சர்யப்படுத்தும் தோட்டக்கலை போன்றவை இன்றளவும்போற்றப்படுகிறது. டில்லிகேட், லாகூர் கேட் என இரு பெரும் நுழைவாயில்கள்உள்ளன. கோட்டைக்குள் இருக்கும் அரசவை மண்டபங்களில் மட்டுமின்றிஅந்தப்புரங்களிலும் கூட கலைநயம் கண்சிமிட்டுகிறது. திவான்--ஆம்எனப்படும் தர்பார் மண்டபம் பொது மக்களும் பிரதிநிதிகளும் அமரும் வகையில்அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கே மன்னருக்காகஅமைக்கப்பட்டிருக்கும் உப்பரிகையும் கம்பீரமானது.
ஜெனானா என்றழைக்கப்படும் அந்தப்புரம், மும்தாஜ் மகால், ரங் மகால் போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள சலவைக்கல் பதிக்கப்பட்டநீரூற்று புதுமையின் பதிப்பு. அவுரங்கசீப்பின் வழிபாட்டுக்காக கட்டப்பட்டமோதிமஷ்திஜ் எனப்படும் பியர்ல் மஷ்திஜ் எனப்படும்(முத்து மசுதி) முழுவதும்சலவைக்கல்லால் கட்டப்பட்டதாகும்.
இவை தவிர அரச குடியிருப்புகள் அமைந்திருந்த நகார்-இ-பெஹிஸ்ட் என்றபகுதி அசத்தல் ரகம். வீடுகளுக்கு உள்ளேயே யமுனை ஆற்றின் நீர் ஓடும்வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படி கனவுகளுக்கும்கற்பனைகளுக்கும் கூட கால்வாய் வெட்டி நனவாகிய முஹலாய மன்னர்கள் இதை சொர்க்கத்தின் நீரோடை என்றும் அழைத்துவந்தனர். நீரோடையை இன்றும்காணலாம். செங்கோட்டையைக் கட்டியவர் ஷாஜகான் என்றாலும் அவருக்குப்பின்னர் அவுரங்கசீப் உள்ளிட்ட மன்னர்களும் சில மாற்றங்களை செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது கண்டோன்மேன்ட்டாக(ராணுவ முகாம் மற்றும்குடியிருப்பு பகுதி) செங்கோட்டை பயன்படுத்தப்பட்டது.

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

அடிப்படை கடமைகள் மற்றும் உரிமைகள்:
1950இல் நமது அரசியல் சாசனம் இயற்றிய போதே குடிமக்களின் அடிப்படைஉரிமைகளும் கடமைகளும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.. 1976 இல் 42 வதுசட்டத்திருத்தத்தின் மூலம் குடிமக்களின் அடிப்படை கடமைகளை அங்கம் 51-A மூலம் இந்திய அரசு அறிமுகப்படுத்தியது..
அடிப்படை கடமைகள்:
  1. அரசியல் அமைப்பை ஏற்றுக்கொள்ளுதல். தேசியக்கொடி, தேசிய கீதத்திற்குமரியாதை செலுத்துதல்.
  2. விடுதலைப் போராட்ட காலத்தில் இருந்த உன்னத இலட்சியங்களை போற்றுதல்.
  3. இந்தியாவின் இறையாண்மையை ஏற்று, ஒருமைப்பாட்டையும் ஒன்றுபட்டஉணர்வையும் வளர்த்தல்.
  4. நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்தல்.
  5. ஜாதி, மத, இன, மொழி வேற்றுமைகளிடையே ஒற்றுமை கண்டுசகோதரத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டை காத்தல்.
  6. இந்தியாவின் பண்பாட்டு பெருமைகளை பேணிக் காத்தல்.
  7. சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்தல், ஏரி, குளம், கிணறுகளை மாசுபடாது காத்தல்மற்றும் வனம், வனவிலங்குகள், பறவைகள், உயிரினங்களை பாதுகாத்தல்.
  8. தொழில், விய்ஞானம், விவசாய ஆய்வுகளை பரப்புதல். மனித நேயம்வளர்த்தல்.
  9. பொதுச் சொத்துகளை பாதுகாத்தல். வன்முறைகளை தவிர்த்தல்.
  10. நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை காட்டுதல்.
  11. 6 வயது முதல் 14 வயதுவரை தம் பிள்ளைகளை கட்டாயமாகப் பள்ளிக்குஅனுப்புதல்.
அடிப்படை உரிமைகள்:
  1. சமத்துவ உரிமை
  2. சுதந்திர உரிமை
  3. சுரண்டலை தடுப்பதற்கான உரிமை
  4. சுதந்திரத்திற்கான உரிமை
  5. பண்பாடு மற்றும் கல்வி பற்றிய உரிமைகள்
  6. அரசியலமைப்பு வழித் தீர்வுகளுக்கான உரிமை...

சனி, 23 ஜனவரி, 2010

சிந்தனைகள்:
நம்பிக்கையை இழந்து விடாதே. பாதை கத்தி முனையில் நடப்பதை போல்கடினமானதுதான். எனினும் எழுந்திரு. விழித்துக்கொள். மனம் தளராதே, நீஅடைய வேண்டிய உனது இலட்சியமாகிய குறிக்கோளை கண்டுபிடி. -சுவாமி விவேகனந்தர்.
சந்தோசமாக இருப்பதால் நாம் சிரிப்பதில்லை. சிரிப்பதால்தான் மகிழ்ச்சியாகஇருக்கிறோம். -வில்லியம் ஜேம்ஸ்

வெள்ளி, 22 ஜனவரி, 2010

BAJAJ PULSAR 135-REVIEW
150, 180, 220 என அதிகரித்துக்கொண்டே போன பல்ஷர் முதன்முறையாக சிசிகுறைந்து வெளிவந்திருக்கிறது!
நிறைகள்:
பல்சர் 135 என்ற பெயருடன் LS என்ற இரு எழுத்துகளும் சேர்ந்திருக்கிறது. LIGHT SPORTS என்பதின் சுருக்கம்தான் LS! DC power head lights என்பதால் பைக்கைஸ்டார்ட் செய்த பிறகுதான் Head lights ஒளிரும் என்கிற தொல்லை இல்லை! பல்சர் 135 LS 4-Stroke, 4-valves கொண்ட என்ஜினுடன் வெளிவந்திருக்கிறது. இதுமற்ற 2-Wheelerகளில் இல்லாத சிறப்பு அம்சம். 134.66CC என்ஜின் கொண்ட இதன் சக்தி 13.5BHP. என்ஜின் ஸ்மூத்தாக இருப்பதால்எவ்வளவு வேகமாக ஆக்சிலேட்டர் கொடுத்தாலும் எஞ்சினில் எந்தவித திக்கல்திணறல் இல்லை. LIGHT SPORTS என்பதற்கேட்ப இதன் எடையை அதிகமாககுறைத்திருக்கிறார்கள். இதன் எடை 122 கிலோதான். பர்பார்மன்ஸை பொறுத்தவரை PULSAR 135 PULSAR 150 க்கு இணையாகஇருக்கிறது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 108 கி.மீ. இதன் எடை குறைவாகஇருப்பதால் டிராபிக் நெருக்கடிகளில் வளைத்து நெளித்து எளிதாக ஓட்டமுடிகிறது. முன்பக்க டிஸ்க் பிரேக் பவர்புல்லாக இருக்கிறது.
குறைகள்:
புது பல்ஷரில் கிக் லிவர் இருக்கும் இடம் மிகவும் இடைஞ்சலாக வலது காலைஇடித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் பெட்ரோல் டேங்கில் 8 லிட்டர் மட்டுமேநிரப்ப முடியும்.
மேலும் விபரங்களுக்கு http://www.pulsar135ls.com

திங்கள், 11 ஜனவரி, 2010

நட்பு
வாழ்க்கை என்னும் விளக்கில் அன்பு என்னும் எண்ணை ஊற்றி பாசம் என்னும் திரியுடன் ஏற்றி வைத்த என் நட்பு எப்போதும் அணையாமல் ஒளி வீசும் ஏன் என்றால் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்தது எங்கள் இதயம் ஜாதி மதம் இனம் கடந்து சாதனை படைத்தது நட்பு....