BAJAJ PULSAR 135-REVIEW
150, 180, 220 என அதிகரித்துக்கொண்டே போன பல்ஷர் முதன்முறையாக சிசிகுறைந்து வெளிவந்திருக்கிறது!
நிறைகள்:
பல்சர் 135 என்ற பெயருடன் LS என்ற இரு எழுத்துகளும் சேர்ந்திருக்கிறது. LIGHT SPORTS என்பதின் சுருக்கம்தான் LS! DC power head lights என்பதால் பைக்கைஸ்டார்ட் செய்த பிறகுதான் Head lights ஒளிரும் என்கிற தொல்லை இல்லை! பல்சர் 135 LS 4-Stroke, 4-valves கொண்ட என்ஜினுடன் வெளிவந்திருக்கிறது. இதுமற்ற 2-Wheelerகளில் இல்லாத சிறப்பு அம்சம்.
134.66CC என்ஜின் கொண்ட இதன் சக்தி 13.5BHP. என்ஜின் ஸ்மூத்தாக இருப்பதால்எவ்வளவு வேகமாக ஆக்சிலேட்டர் கொடுத்தாலும் எஞ்சினில் எந்தவித திக்கல்திணறல் இல்லை. LIGHT SPORTS என்பதற்கேட்ப இதன் எடையை அதிகமாககுறைத்திருக்கிறார்கள். இதன் எடை 122 கிலோதான்.
பர்பார்மன்ஸை பொறுத்தவரை PULSAR 135 PULSAR 150 க்கு இணையாகஇருக்கிறது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 108 கி.மீ. இதன் எடை குறைவாகஇருப்பதால் டிராபிக் நெருக்கடிகளில் வளைத்து நெளித்து எளிதாக ஓட்டமுடிகிறது. முன்பக்க டிஸ்க் பிரேக் பவர்புல்லாக இருக்கிறது.
குறைகள்:
புது பல்ஷரில் கிக் லிவர் இருக்கும் இடம் மிகவும் இடைஞ்சலாக வலது காலைஇடித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் பெட்ரோல் டேங்கில் 8 லிட்டர் மட்டுமேநிரப்ப முடியும்.
மேலும் விபரங்களுக்கு http://www.pulsar135ls.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக