அடிப்படை கடமைகள் மற்றும் உரிமைகள்:
1950இல் நமது அரசியல் சாசனம் இயற்றிய போதே குடிமக்களின் அடிப்படைஉரிமைகளும் கடமைகளும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.. 1976 இல் 42 வதுசட்டத்திருத்தத்தின் மூலம் குடிமக்களின் அடிப்படை கடமைகளை அங்கம் 51-A மூலம் இந்திய அரசு அறிமுகப்படுத்தியது..
அடிப்படை கடமைகள்:
- அரசியல் அமைப்பை ஏற்றுக்கொள்ளுதல். தேசியக்கொடி, தேசிய கீதத்திற்குமரியாதை செலுத்துதல்.
- விடுதலைப் போராட்ட காலத்தில் இருந்த உன்னத இலட்சியங்களை போற்றுதல்.
- இந்தியாவின் இறையாண்மையை ஏற்று, ஒருமைப்பாட்டையும் ஒன்றுபட்டஉணர்வையும் வளர்த்தல்.
- நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்தல்.
- ஜாதி, மத, இன, மொழி வேற்றுமைகளிடையே ஒற்றுமை கண்டுசகோதரத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டை காத்தல்.
- இந்தியாவின் பண்பாட்டு பெருமைகளை பேணிக் காத்தல்.
- சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்தல், ஏரி, குளம், கிணறுகளை மாசுபடாது காத்தல்மற்றும் வனம், வனவிலங்குகள், பறவைகள், உயிரினங்களை பாதுகாத்தல்.
- தொழில், விய்ஞானம், விவசாய ஆய்வுகளை பரப்புதல். மனித நேயம்வளர்த்தல்.
- பொதுச் சொத்துகளை பாதுகாத்தல். வன்முறைகளை தவிர்த்தல்.
- நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை காட்டுதல்.
- 6 வயது முதல் 14 வயதுவரை தம் பிள்ளைகளை கட்டாயமாகப் பள்ளிக்குஅனுப்புதல்.
அடிப்படை உரிமைகள்:
- சமத்துவ உரிமை
- சுதந்திர உரிமை
- சுரண்டலை தடுப்பதற்கான உரிமை
- சுதந்திரத்திற்கான உரிமை
- பண்பாடு மற்றும் கல்வி பற்றிய உரிமைகள்
- அரசியலமைப்பு வழித் தீர்வுகளுக்கான உரிமை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக