உற்சாகம் அளித்த வெற்றி
ஒருவழியாக ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் தொடர் தோல்விகளுக்கு தற்காலிக ஆறுதல் கிடைத்துள்ளது. இன்று நடைபெற்ற இருபது ஓவர் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது இந்திய அணி. ஆனால் இது ஆரம்பம்தான். காம்பிர் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது வரவேற்கக் கூடிய ஒன்று. ஆனால் சேவாக் தொடர்ந்து சொதப்புவது கவலை தரக்கூடிய விஷயம். பீல்டிங்கில் இன்று தெரிந்த வேகம் தொடர்ந்தால் எப்பேர்ப்பட்ட அணியையும் வீழ்த்த இந்திய அணியால் முடியும்.
இதனைத் தொடர்ந்து முத்தரப்பு தொடர் வரும் ஞாயிறன்று தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே இந்தியா ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. மூன்றாவது அணியாக இலங்கை அணி பங்கு கொள்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை இழந்தாலும் இறுதி இரண்டு போட்டிகளிலும் 300க்கும் மேற்பட்ட ரன்களை சேஸ் செய்து தொடருக்கு தயார் என்பதை இலங்கை அணி காட்டியிருக்கிறது. எனவே இந்திய அணிக்கு நிச்சயம் சவால் காத்திருக்கிறது. அந்த அணியைப் பொறுத்தவரை துவக்கம் சிறப்பாக அமைந்துவிட்டால் எதிரணிக்கு சிரமம்தான்.



ஆஸ்திரேலியா அணையைப் பொறுத்தவரை ஒருநாள் போட்டிகளில் சமீப காலமாக சற்றே தடுமாறிவருகிறது. ஆனால் தொடருக்கு சிறப்பான அணிதான் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அனுபவ வீரரான பாண்டிங் அணியில் இருப்பது மிகப் பெரும் பலம். பந்துவீச்சில் பிரட்லீ நட்சத்திரப் பந்துவீச்சாளர். வேகப் பந்து வீச்சாளர்கள் அதிகமாக உள்ளது மற்றும் சொந்த மண் ஆகியவற்றால் ஆஸ்திரேலியா தொடரை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.



இந்திய அணியைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சு பலவீனமாக உள்ளது டெஸ்ட் தொடரிலேயே தெரிந்தது. ஆஸ்திரேலியா மண்ணில் சுழற்பந்துவீச்சு எடுபடுவது சந்தேகமே. பேட்டிங்கைப் பொறுத்தவரை மிடில் ஆர்டர் நம்பிக்கை அளிக்கிறது. நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் இருப்பது பெரும்பலமாக இருந்தாலும் அவரது சமீப கால தடுமாற்றம் கவலை அளிக்கிறது. துவக்கம் சொதப்பினாலும் விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் ஷர்மா மற்றும் டோனி சிறப்பான ஆட்டத்தைத் தர வல்லவர்கள். கடைசியாக நடந்த ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் சச்சின் அசத்த தொடரை வென்றது இந்திய அணி.



எனவே இம்முறையும் வெல்லுமா அல்லது ஆஸ்திரேலியா தொடர்ந்து சாதிக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக