காதல்
உண்மையா காதலிக்கறவங்க என்னை மன்னிக்கணும். நாட்டு நடப்பைக் கொஞ்சம் சொல்லியிருக்கேன்.இன்று எல்லா ஊர்களிலும் காதலர் தின கொண்டாட்டம்தான். நம்ம நாட்டைப் பொறுத்தவரை இப்ப ஒரு பதினைந்து வருடங்களாகத்தான் காதலர் தினம் பிரபலம். ஏன்னா நம்ம நாட்டு கலாசாரம் அப்படி. நம்ம நாட்டைப் பொறுத்தவரை அம்மா அப்பா பார்க்கற துணையை ஏத்துக்கிரதுதான் வழக்கம்.எப்போ மேற்கத்திய கலாசாரம் உள்ள வர ஆரம்பிச்சதோ அப்பா இருந்து நம்ம நாட்டுக்கு சனி பிடிச்சுக்கிட்டது. பசங்களும் பொண்ணுங்களும் கை நிறைய சம்பத்திக்க ஆரம்பிச்சுட்டாங்க, பெத்தவங்க மேல மரியாதை குறைஞ்சுடுச்சு. ஒரு பையனுக்கு ஒரு பொண்ணைப் பார்த்தவுடனே வர்றது காதல் இல்லை, அது வெறும் பருவக் கவர்ச்சி. ஆனா இதை காதல்னு நினைச்சுக்கிட்டு நம்ம பசங்க பண்ற அட்டகாசம் இருக்கே, தாங்க முடியலை. பொண்ணுகளும், நம்ம செலவுக்கும், நாலு இடத்துக்கு வண்டில கூட்டிட்டுப்போறதுக்கும் ஒரு ஆள் இருந்தா தேவலைன்னு பார்த்து சிரிச்சு வைக்கிறாங்க. ஆனா வாழ்க்கைன்னு வரும்போது பொண்ணுக தெளிவா முடிவு ஈசியா எடுத்துடறாங்க. ஆனா பசங்க தண்ணியடிச்சுட்டு தானும் தூங்காம மத்தவங்களையும் தூங்க விடாம புலம்பித் தள்ளிடறாங்க.
நானும், இந்த வருஷம் பத்து நாளைக்கு முன்னாடியே என்னோட பக்கத்துல காதல்னா என்னன்னு கேட்டிருந்தேன். ஒருத்தரும் சரியா பதில் சொல்ல மாட்டேங்கறாங்க. என்னோட கல்லூரி நண்பர் ஒருத்தர் "அது ஒரு அரிப்பு மாதிரிட, சொறியும்போது சுகமா இருக்கும். அப்புறம் பார்த்தா வடுவா மாறிடும்"னு சொன்னார்.
மற்றொரு நண்பர் சொல்லும்போது, "அது சரக்கடிக்கற மாதிரி, கொஞ்சமா அடிச்சா பெருசா ஒன்னும் பாதிப்பில்லை, ஆனா நிறைய குடிச்சுட்டா உடம்புக்கு ஆகாது" அப்படின்னார்.
என்னவோ என்னோட புலம்பலை கொட்டியிருக்கேன், இது எத்தனை பேர் காதுல விழப் போகுதுன்னு தெரியலை. அப்படியே யாராவது காதல்னா என்னன்னு சொல்லுங்க பிளிஸ்....




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக